TamilsGuide

ரஷ்யாவில் அதிகரிக்கும் ஆபத்து - புதினுடன் ட்ரம்ப் அவசர பேச்சுவார்த்தை

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள தொற்றுநோய் ஆராய்ச்சி மைய பெண் ஆராய்ச்சியாளர் பிளேக் பாதிப்பால் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இது சாதாரண நிமோனியா காய்ச்சல் தான் என ரஷ்ய அரசு மறுத்தாலும், முன்னெச்சரிக்கையாக ஆராய்ச்சி மையம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள 05 வைத்தியசாலைகள் மற்றும் சீல் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பெண் ஆராய்ச்சியாளருடன் தொடர்பில் இருந்த மற்றொருவர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை முடிவுகள் மற்றும் ஆய்வகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 2-வது ஊழியர் குறித்த முழுமையான மருத்துவத் தரவுகளை உடனடியாக வழங்கும்படி ரஷ்யாவுக்கு உலக சுகாதார நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையுடன் அவசர ஆலோசனை நடத்திய ட்ரம்ப், இந்த மர்ம நோய் பரவல் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமை கேட்டறிந்தார்.

Leave a comment

Comment