கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நபர்கள்! பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கை
கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனமான சதோசவிற்கு (Sathosa) தரமற்ற பொருட்களை வழங்கிய எட்டு விநியோகஸ்தர்கள் கடந்த மூன்று மாதங்களில் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (07) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
சில விநியோகஸ்தர்கள் ஏனைய கடைகளுக்கு பொருட்களை வழங்கிய பின்னரே சதோசவிற்கும் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
இதன்படி, பொருட்களின் விலைகளை படிப்படியாக குறைக்க சதோச நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களில் சதோச அதிக இலாபம் ஈட்டியுள்ளதாகவும், தனது நஷ்டமில்லா நிலையைத் தக்கவைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் 'சஹஜீவன' (Sahajeevana)கணக்கில் இருந்த ரூ. 140 கோடிக்கு எதுவும் ஆகவில்லை என்றும், அதில் ரூ. 240 கோடி நஷ்டம் சேர்ந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.






















