ராதிகா சரத்குமார் - லியோ சிவகுமார் நடித்துள்ள டெலிவரி பாய் வெளியீடு தேதி அறிவிப்பு
சினிமா
நடிகர்கள் ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள டெலிவரி பாய் படம் அக்டோபர் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் காளி வெங்கட், பிரிகிடா சாகா, ஜென்சன் திவாகர் மற்றும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அழகியே கண்ணே (2023), சாமனியன் (2024), கோழிப்பண்ணை செல்லதுரை (2024) ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்த லியோ இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அசாசி கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் அமுதா லியோனி மற்றும் லெனின் மாதேஸ்வரன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி படத்திற்கு இசையமைத்துள்ளார்.






















