TamilsGuide

புடினிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வடகொரிய அதிபர் கிம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பிறந்தநாளை முன்னிட்டு (அக்டோபர் 7, 2026), வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வடகொரியாவின் அரசு ஊடகமான ‘கேசிஎன்ஏ’ (KCNA), செய்திகளின்படி, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு வடகொரியா தனது “மாறாத ஆதரவை” (invariable support) தொடர்ந்து வழங்கும் என்று கிம் ஜோங் உன் அக்கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.

புடினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை “நீதிக்கான புனிதப் போர்” (sacred war of justice) என்று கிம் ஜோங் உன் வர்ணித்துள்ளார். ரஷ்ய மக்கள் நடத்தும் இப்போராட்டம் நிச்சயம் அவர்களின் வெற்றியிலேயே முடியும் எனத் தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2022-இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து, வடகொரியா கிரெம்ளின் நிர்வாகத்தின் முக்கிய நட்பு நாடாகவும் இராணுவக் கூட்டாளியாகவும் உருவெடுத்துள்ளது.

ஜூன் 2024-இல் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களையும் வீரர்களையும் அனுப்பி ஆதரவு அளித்து வருவதாகத் தென்கொரிய  கூறி வருகின்றது.

 இன்னிலையில்  இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு உலகளாவிய பாதுகாப்புச் சூழலில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
 

Leave a comment

Comment