TamilsGuide

பல கோடி லாபத்தை பெற்ற ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே பட ஓடிடி ரிலீஸ் 

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும்.

அப்படி ஹாலிவுட் தயாராகி இந்தியாவில் வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி மாஸ் வசூல் வேட்டை செய்தது.

டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் கடந்த ஜுலை 31ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே. இதில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளனர்.

உலகளவில் மாஸ் வசூல் வேட்டை செய்த இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ. 500 கோடிக்கு மேலான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.

இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையைப் படத்துள்ள இப்படம் விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்தப் படத்தை பார்க்க தனியாக பணம் கட்ட வேண்டும். அமேசான் ப்ரைம் சந்தாதாரராக இருந்தாலும்கூட, இந்தப் படத்துக்காக தனியே கட்டணம் செலுத்த வேண்டுமாம். விரைவில் அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் பார்க்கும் வகையில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 


 

Leave a comment

Comment