TamilsGuide

லவ் ஆல்வேஸ் டீசர் வெளியீடு

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் ஜெயபிரகாஷ், ஜெயசுதா, கௌரி கிஷன் மற்றும் ரம்ஜான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ‘லவ் ஆல்வேஸ்’.

கடந்த வாரம் இத்தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இருந்தநிலையில், தற்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது.

மொத்தம் 8 அத்தியாயங்களை கொண்ட இத்தொடரின் முதல் அத்தியாயம் அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. கே.டி. (எ) கருப்புதுரை படத்தை இயக்கிய இயக்குநர் மதுமிதா இத்தொடரை இயக்கியுள்ளார். ஒவ்வொரு அத்தியாயமும் 30 நிமிடங்கள் உள்ளன.

இத்தொடருக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். 
 

Leave a comment

Comment