TamilsGuide

தகாத செயலில் ஈடுபட்ட கனடியருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை

தகாத செயலில் ஈடுபட்ட கனடிய பிரஜை ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமது செல்போனில் குழந்தைகள் தொடர்பான 700-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து எல்லை கடக்க முயன்ற குற்றத்திற்காக, கனடாவின் மொண்ட்ரியால் நகரைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மொண்ட்ரியாலைச் சேர்ந்த ஸ்னியர் குர்கோவ் என்ற அந்த இளைஞர், கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கின் அலெக்சாண்ட்ரியா பே எல்லைச் சாவடி வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றார்.

அப்போது அவரது கைபேசியைப் பரிசோதித்த அதிகாரிகள், அதில் குழந்தைகள் தொடர்பான 700-க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆபாசக் கோப்புகள் இருப்பதைக்கண்டு பிடித்தனர். நீ

திமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட குர்கோவ், சமூக வலைதளங்கள் மற்றும் வெளிநாட்டு கோப்பு பகிர்வு செயலிகள் மூலம் பல ஆண்டுகளாக இத்தகைய ஆபாசப் படங்களைச் சேகரித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு செப்டம்பர் 15 அன்று 6.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  
 

Leave a comment

Comment