TamilsGuide

Super Intelligence Force - விசேட பணிக்குழுவை உருவாக்கிய ட்ரம்ப்

AI தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதி செய்யவும், அதன் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் ' Super Intelligence Force என்ற புதிய விசேட பணிக்குழுவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தேசிய உளவுத்துறை பணிப்பாளர் ஜே கிளேய்டன் தலைமையில் இயங்கவுள்ள இந்தப் பணிக்குழு, நேரடியாக அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி சுசி வைல்ஸ் ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

'செயற்கை' (Artificial) என்ற சொல் போலியான தன்மையைக் குறிப்பதாகக் கூறி, AI தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வமாக 'சுப்பர் இன்டலிஜென்ஸ்' (SI) என பெயர் மாற்றம் செய்யும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையெழுத்திட்டார்.

நுகர்வோர்கள், பொது நல அமைப்புகள், மத நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அரசாங்கத்தின் தொடர்புகளை ஒருங்கிணைப்பதே இந்தப் பணிக்குழுவின் பிரதான பணியாகும்

. இந்தப் பணிக்குழுவில் மத்திய வர்த்தக ஆணைக்குழுவின் தலைவர் ஆண்ட்ரூ பெர்குசன், பாதுகாப்புத் திணைக்கள துணைச் செயலாளர் எமில் மைக்கேல் மற்றும் பணியாளர் முகாமை அலுவலக பணிப்பாளர் ஸ்கொட் குப்பர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன், OpenAI, Anthropic, SpaceX மற்றும் Google உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதற்கமைய, பல பில்லியன் டொலர் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க் உட்பட சில முன்னணி தொழில்நுட்பத் தலைவர்கள் ஏற்கனவே இந்தப் புதிய பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.   
 

Leave a comment

Comment