தமன்னா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சினிமாவைத் தாண்டி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், சொந்தமாக தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால், எப்படிப்பட்ட தாயாக இருப்பீர்கள்? என்று தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் சுவாரசியமாக இருந்தது.
நான் ஒரு குழந்தைக்கு தாயானால் மிகவும் கண்டிப்பான அம்மாவாக இருப்பேன் என்று என் அம்மா நினைக்கிறார். ஆனால், அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் மிகவும் கூலான அம்மாவாகத்தான் இருப்பேன். என் குழந்தைகளுடன் மிகவும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழக விரும்புகிறேன்.
அவர்களிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தாயாக இருக்க மாட்டேன். ‘இன்று பள்ளிக்கு போக வேண்டாம்... சந்தோஷமாக வீட்டிலேயே இருங்கள்’ என்று சொல்லும் அம்மாவாக நான் இருக்க விரும்புகிறேன். என் குழந்தைகளுடன் ஒரு தாயாக மட்டுமல்லாமல், அவர்களின் நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.”இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.


