TamilsGuide

இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம் - அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம்

Neighbour Shares How flydubai Pilot's Wife Shows courage: ஃப்ளைதுபாய் விமானத்தில் ஓமன் நாட்டு இணை விமானியால் தாக்கப்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் மனைவி வெளிப்படுத்திய தைரியம் அக்கம்பக்கத்தினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை காலை துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஃப்ளைதுபாய்(Flydubai)  விமானம் FZ1073 சவுதி அரேபியாவின் தபூக்(Tabuk) விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இஸ்ரேலிய நாட்டினர் உட்பட 174 பேருடன் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது, விமானத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய ஓமன் நாட்டு இணை விமானியின் முயற்சியை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் அபாரமான துணிச்சல் முடிவுக்கு கொண்டு வந்தது.

விமானத்தின் காக்பிட்டுக்குள் ஓமன் நாட்டு இணை விமானியால் கோடாரியால் தாக்கப்பட்ட போதிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறக்க முயன்ற தோடு, ஆபத்து குறித்து விமான குழுவினருக்கும், பயணிகளுக்கும் அவசர எச்சரிக்கையை வெற்றிகரமாக வெளிப்படுத்தினார்.

அத்துடன் விமானத்தில் இருந்த மற்ற சில ஊழியர்களின் உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்ட இணை விமானியை தைரியத்துடன் தடுத்து கட்டுப்படுத்தினார்.

உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பவம் தொடர்பாகவும், விமானிக்கு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்தும் பெரும் கவலையில் இருந்த நிலையில்,  இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்  அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து கேப்டன் ஸ்மித் மச்சார் தன்னுடைய மனைவியுடன் தங்கியிருக்கும் குடியிருப்பை சேர்ந்த அக்கம் பக்கத்தினர் பலர் கேப்டனின் மனைவியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த தோடு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளனர்.

ஆனால் கேப்டனின் மனைவி அச்சத்தினால் பீதி அடையாமல், நிதானமாகவும், அமைதியாகவும் அனைவருக்கும் பதிலளித்துள்ளார்.

மேலும் அக்கம் பக்கத்தினரின் பிராத்தனைகளுக்கும், ஆறுதலுக்கும் நன்றியையும் அவர் தெரிவித்ததுடன், தன்னுடைய கணவர் நலமுடன் இருப்பதாக அவர்களுக்கு திரும்ப ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஆர்த்தி ஷர்மா வெளியிட்ட பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “ வெளிச்சத்தில் உள்ள ஒருவரை நாம் கொண்டாடும் போது, அதே நபரின் பின்னால் தன்னம்பிக்கையுடன் ஒரு குடும்பம் உள்ளது. தன்னுடைய நபர் எப்போது திரும்புவார் என்ற நம்பிக்கை, பிரார்த்தனை, எதிர்பார்ப்பு என அனைத்துடன் காத்திருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment