TamilsGuide

இலங்கை கடற்பரப்பில் குவிந்துள்ள ஈரானிய கப்பல்கள்! - இலங்கைக்கு மறைமுகமாக காத்திருக்கும் பாரிய சிக்கல் 

இலங்கையின் கடற்பிராந்தியத்துக்கு மிக அருகாமையில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கி கப்பல்களுக்கு இலங்கை உதவும் பட்சத்தில் வெளியக அழுத்தங்களுக்கு உள்ளாக நேரலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த கப்பல்கள் காரணமாக இலங்கை தற்போது பாரிய சிக்கலானதொரு கடல்சார் இராஜதந்திர சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. TravelGuides & Travelogues

ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்குக்கரையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

அவற்றில் சில கப்பல்கள் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல்கள், தடை விதிக்கப்பட்ட ஈரானிய மசகு எண்ணெயை சீனாவுக்கு கொண்டுசெல்வதில் ஈடுபட்டிருந்த ஈரானுடன் தொடர்புடைய கப்பல்கள் ஆகும்.

ஈரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய கப்பல்களுக்கு அவசியமேற்படும் சேவைகளை வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை அமெரிக்க அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் குறப்படுகின்றது.

இலங்கையின் கடற்பரப்புக்கு வெளியே ஈரானிய கொடியிடப்பட்ட கப்பல்கள் தரித்து நிற்பதனால் , இலங்கையை பொறுத்தமட்டில் கப்பல்கள் தரித்துநிற்கும் சூழமைவு கடற்பிராந்திய பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர அணுகுமுறை சார்ந்து ஒரு சிக்கலான நிலையைத் தோற்றுவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'இக்கப்பல்கள் இலங்கைக்கு அருகாமையில் தரித்து நின்றாலும், நாட்டின் கடற்பரப்புக்கு வெளியே நிற்பதனால், அவற்றின் மீது இலங்கை அரசுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களே உள்ளன. TravelGuides & Travelogues

அதேவேளை தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கான சேவைகளை வழங்கும் பட்சத்தில் வெளியக அழுத்தங்களுக்கு உள்ளாக நேரலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment