TamilsGuide

நள்ளிரவில் மெல்பேர்ன் நகரை உலுக்கிய நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரம் மற்றும் விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளில் 4.8 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 2:00 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜியோசயின்ஸ் அவுஸ்திரேலியா (Geoscience Australia) எனக் கூறப்படும் அவுஸ்திரேலிய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

மெல்பேர்னிலிருந்து தென்கிழக்கே சுமார் 135 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சவுத் கிப்ஸ்லாண்டின் லியோங்கதா (Leongatha) நகரத்திற்கு அருகில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் வீடுகளும் ,கட்டிடங்களும் அதிர்வுக்குள்ளான போதிலும், இதுவரை எந்த வித சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment