TamilsGuide

முட்டை, கோழி இறைச்சி விலை அதிகரிக்கும் சாத்தியம்

சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் அதிகரிக்க வழிவகுக்கக்கூடும் என்று அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் (AIPA)  எச்சரித்துள்ளது. 

விலங்குத் தீவனத்தில் சோளத்திற்கு மாற்றாக அரிசி பயன்படுத்தப்படுவது, கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

மேலும், கடுமையான சோளத் தட்டுப்பாடு காரணமாக, சுமார் 20 சதவீத சிறு அளவிலான கோழிப்பண்ணையாளர்கள் இத்தொழிலிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment

Comment