TamilsGuide

திருமணக் கோலத்தில் நள்ளிரவுப் பயணம்: கவுரி கிஷனின் தாரகை ப்ரோமோ வீடியோ

நடிகை கவுரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘தாரகை’. இப்படத்தில் காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

“ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும். ஒரு பயணம், ஒரு தேடல், பல பெண்களின் பாதைகள்தான் இதன் கதை” என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று ‘தாரகை’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வீடியோவில், "என்று ஒரு பெண் இரவில் சாலைகளில் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடுகிறாளோ, அன்றுதான் இந்தியாவில் உண்மையான சுதந்திரம் தினம்" என்பதோடு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, நள்ளிரவில் மணப்பெண் கோலத்தில் கவுரி கிஷன், சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஏறுவதைக் காண்கிறோம். சென்னைக்கு இன்னும் 96 கி.மீ. தூரம் உள்ளது என்பதை ஒரு மைல்கல் தெரிவிக்கிறது. இசை என்ற கதாபாத்திரத்தில் கவுரி கிஷன் நடித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ வீடியோ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Leave a comment

Comment