TamilsGuide

இலங்கையில் வரி முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் ஆண்டு முதல் நாட்டின் வரி முறைமையை மேலும் எளிமையாகவும் இலகுவாகவும் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிசாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.  

இதற்கமைய, சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் ஏனைய வரிகளை நீக்கி, படிப்படியாக வரிகளை எளிமைப்படுத்துவதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதன்படி, ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் இத்தகைய எளிய வரி நடைமுறைகளே பின்பற்றப்படும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை இணைக்கும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாகவே காகிதமற்ற சுங்க பிரகடன முறைமையை நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment