இலங்கையின் தெமேற்கு கடலிலுள்ள 19 ஈரானிய கப்பல்களுக்கு உதவி வழங்கினால் இலங்கைக்கு இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. TravelGuides & Travelogues
உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் ஏதுமின்றி தென்மேற்கு கடற்பகுதியில் 19 ஈரானிய கப்பல்கள் தத்தளிக்கும் நிலையில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் அந்தக் கப்பல்களுக்கு தேவையான விநியோகங்களை வழங்கினால் இலங்கைக்கு எதிராக இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக Wall Street Journal பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்தச் சூழ்நிலையில் விநியோகங்களை வழங்குவது பொருத்தமானதல்ல என துறைமுக அதிகார சபை சில கப்பல்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இலங்கையை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட 3 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்றும் தூதரகத்தினால் நடத்தப்பட்டுள்ளது.
அதில், தடைகளுக்குள்ளான கப்பல்களுக்கு கடல்சார் முகவர்கள், எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஏனைய சேவை வழங்கும் நிறுவனங்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ உதவி வழங்க கூடாதென எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வழங்கினால் அமெரிக்கத் தடைகளுக்கு முகங்கொடுக்கும் அபாயம் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.


