TamilsGuide

தாய்க்கும் தந்தைக்கும் பிரசவ விடுப்பு - சுவிஸ் மக்கள் அமோக ஆதரவு

Swiss voters are likely to have their say on a proposal to introduce parental leave: சுவிஸ் வாக்காளர்கள் பிரசவ விடுப்பு தொடர்பில் முடிவெடுக்க, ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில், தாய்க்கும் தந்தைக்கும் பிரசவ விடுப்பு அளிப்பது தொடர்பில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தேவையான கையெழுத்துக்களை விட கூடுதல் கையெழுத்துக்களை அந்த பிரேரணை பெற்றுவிட்டது.

தாய்க்கும் தந்தைக்கும் பிரசவ விடுப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட அந்த பிரேரணைக்கு ஆதரவாக 112,517 பேர் கையெழுத்திட்டுள்ளனர். 

அந்த பிரேரணையின்படி, குழந்தை பெற்ற தாய்க்கு மட்டுமல்ல, அதன் தந்தைக்கும் பிரசவ விடுப்பு வழங்கப்படும். 

ஆளுக்கு 18 வாரங்கள் விடுப்பு வழங்கப்படும் நிலையில், இந்த விடுப்பை ஒரே நேரத்தில் பெற்றோர் எடுக்கமுடியாது.

அதாவது, முதலில் தாய் விடுப்பு எடுத்து குழந்தையை கவனித்துக்கொள்ள, பின் அவர் வேலைக்குப் போகத் துவங்கும் நேரத்தில் தந்தை விடுப்பு எடுக்கலாம். அல்லது அவரவர் வசதிக்கேற்ப, யார் முதலில் விடுப்பு எடுப்பது என முடிவு செய்துகொள்ளலாம்.

இந்த பிரேரணைக்கு எதிர்ப்பும் நிலவுகிறது என்றாலும், பிரேரணைக்கு ஆதரவாக 112,517 பேர் கையெழுத்திட்டுள்ளதால், அதற்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. 
 

Leave a comment

Comment