TamilsGuide

ரணிலுக்கு திடீர் அழைப்பு மேற்கொண்ட சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நீதவான் நீதிமன்ற வாயிலில் வைத்து பிரபல ஊடக வலையமைப்பின் புகைப்படப் பிடிப்பாளர், ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரிப்பதற்காகவே சஜித் அழைப்பு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீர்மானிக்கமிக்க பேச்சுவார்த்தை

இதன்போது சமகால அரசியல் நிலைமை குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரண்டு கட்சிகளும் இணைந்து கொள்வது தொடர்பில் தீர்மானிக்கமிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment