TamilsGuide

ஜப்பானில் வெளிநாட்டினருக்கான நிரந்தர வதிவிடக் கட்டணம் 20 மடங்காக அதிகரிப்பு

ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான நிரந்தர வதிவிட அனுமதி உள்ளிட்ட சில குடிவரவு தொடர்பான கட்டணங்களை 20 மடங்கு வரை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புதிய கட்டண நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இதுவரை 10,000 யென் ஆக காணப்பட்ட நிரந்தர வதிவிட அனுமதிக்கான கட்டணம் 200,000 யென் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை 6,000 யென் நிலையான கட்டணமாக அறவிடப்பட்டு வந்த விசா தொடர்பான கட்டணத்திற்குப் பதிலாக, புதிதாக வழங்கப்படும் விசாவின் காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான குடிவரவு மற்றும் வதிவிட அனுமதி தொடர்பான கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய திருத்தங்களாகும்.
 

Leave a comment

Comment