TamilsGuide

மைசூருவில் படப்பிடிப்பு இடையேயும் ஆன்மீக பயணம் - சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசித்த ரஜினிகாந்த்

திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமாக ‘தர்மன்’ படம் தயாராகி வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் 3-வது கட்டப்படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்த படப்பிடிப்பு மைசூருவில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் ரஜினிகாந்த் தங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த் மைசூரு சாமுண்டி மலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். பூஜை முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த், திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து புன்னகைத்தபடியே கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
 

Leave a comment

Comment