TamilsGuide

10 நிமிடங்களில் 1.5 லிட்டர் குளிர்பானம் குடித்த இளைஞன் மரணம்

வெயிலில் வெப்பத்தை தணிக்க வெறும் 10 நிமிடங்களில் 1.5 லிட்டர் கோகோ கோலாவை குடித்ததல் 22 வயது இளைஞர் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் சீனாவின் பெய்ஜிங் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் அதிக அளவு குளிர் பணத்தை குடித்ததால் வயிற்றில் கடுமையான வாயு மற்றும் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் குடல் மற்றும் ரத்த நாளங்களில் அதிகப்படியான வாயு சேர்ந்து உடல் உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் தடைப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே அவர் மருத்துவனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர் 18 மணி நேர தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார். பாக்டீரியா தாக்கமும் அவரின் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
 

Leave a comment

Comment