TamilsGuide

என் திருமணத்தில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?- நடிகை அஞ்சலி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் அஞ்சலி, தற்போது ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஞ்சலியிடம், 'திருமணம் எப்போது?' என்று கேட்கப்பட்டது.

அதற்கு அஞ்சலி பதிலளிக்கையில், "ஏன் எல்லோரும் இதையே என்னிடம் கேட்கிறீர்கள்? திருமணத்தை எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்வேன்.

இதில் ஏன் மற்றவர்களுக்கு இவ்வளவு அக்கறை? என்று புரியவில்லை. திருமணம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. திருமணத்துக்கு பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையே மாறுகிறது.

எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும் மனதார வாழ்த்தும் நல்ல உள்ளங்கள் என் அருகில் இருந்தால் போதும். ஆடம்பரமான கூட்டம் எனக்கு தேவையில்லை", என்று குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment