TamilsGuide

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (30) சற்று வலுப்பெற்றுள்ளது.

இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 326.2849 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 335.3368 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.

இன்றைய தினத்திற்கான முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் பின்வருமாறு,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபாய் 02 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 430 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 444 ரூபா 79சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபாய் 57சதம், விற்பனைப் பெறுமதி 381 ரூபாய் 59 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபாய் 43சதம், விற்பனைப் பெறுமதி 405 ரூபாய் 13 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபா 62 சதம், விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 25 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 235 ரூபாய் 79என அறிவிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253 ரூபாய் 68 சதம், விற்பனைப் பெறுமதி 264 ரூபாய் 09 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 07 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 15 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment