TamilsGuide

ஈரானுடனான போர் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

எனினும், போர் முடிவடையும் காலக்கெடு அல்லது அதற்கான திட்டம் தொடர்பில் அவர் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

அத்துடன், ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது எனவும் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கட்டார் மத்தியஸ்தத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு அந்நாட்டு வாக்காளர்களுக்கு 25 பக்க திறந்த கடிதமொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை எதிர்க்குமாறும், அமெரிக்காவின் வெளிநாட்டுப் போர்கள் மற்றும் இஸ்ரேலுக்கான ஆதரவு தொடர்பான கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் அமெரிக்க மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ட்ரம்ப் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டும் நிலையில், தனது அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கங்களுக்காகவே முன்னெடுக்கப்படுவதாக ஈரான் தெரிவித்து வருகிறது.
 

Leave a comment

Comment