TamilsGuide

100ஆவது வயதில் காலமான மகாதீரின் மனைவி  - மலேசியாவில் அரசு மரியாதை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மனைவியும், மருத்துவருமான டாக்டர் துன் சித்தி ஹஸ்மா இன்று (28) தனது 100ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவையடுத்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், முன்னாள் பிரதமர்களான இஸ்மாயில் சப்ரி யாகூப் மற்றும் முஹிடின் யாசின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் துன் சித்தி ஹஸ்மாவுக்கு மலேசியாவில் அரசு மரியாதை கலந்த இறுதிச் சடங்கு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீரின் துணைவியாக நீண்டகாலம் பொதுவாழ்வில் அறியப்பட்ட துன் சித்தி ஹஸ்மா, மருத்துவத் துறையிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment