TamilsGuide

யாழ் வல்லை முனியப்பர் கோவிலடியில் விபத்து! ஐயர் பலி!

யாழ் வல்லை முனியப்பர் கோவில் அருகில் உள்ள பாதசாரிக்கடவையில் நடந்த வீதி விபத்தில் வடமராட்சி உடுப்பிட்டி கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கோயில் குருக்கள் ஓருவர் பலியாகியுள்ளார்.

வீதியில் வேகமாக பயணித்த ஆலய பூசகரின் உந்துருளி, ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் வீதியில் ஏறிய இளைஞர் ஒருவரின் உந்துருளியுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது நிலைதடுமாறி வீதியில் வீழ்ந்த ஆலய பூசகர், அவ்வழியாக பயணித்த மற்றுமொரு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

Leave a comment

Comment