மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (28) தொடக்கி வைத்தார்.
முதல் குழந்தையாக அழகுமலை பகுதியைச் சேர்ந்த முத்து யாழினி என்ற பெண் குழந்தைக்கு தங்க மோதிரத்தை முதல்வர் விஜய் அணிவித்தார்.
இந் நிலையில் , முதலமைச்சர் விஜய் மோதிரம் அணிவிக்கையில் , அவரை பார்த்து புன்னகை செய்த குழந்தையின் புகைப்படம் வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், அந்த மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து திட்டத்தை தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில், அமைச்சர்கள் என். ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார், விஸ்வநாதன், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமைச்சர்கள் இன்று தொடங்கிவைக்கின்றனர். 2026-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளமை தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


