TamilsGuide

சின்னாபின்னமாக சிதைந்து போகும் ராஜபக்ச குடும்பம் - தனிமையில் தவிக்கும் மகிந்த

இலங்கையில் அடுத்த அரச பரம்பரை என வர்ணிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பம் தற்போது சின்னாபின்னமாக சிதைந்து போயுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பயணவழிகாட்டிகளைப் படி

இறுதிக்கட்ட போரை முடித்து வைத்த  நிலையில், ராஜபக்ச குடும்பத்தை அடுத்த துட்டகைமுனு மன்னர் பரம்பரை என, தென்னிலங்கை மக்கள் புகழாரம் சூட்டி வந்தனர்.

சமகால அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ராஜபக்ச குடும்பத்தினர் கைது செய்யப்பட்டும் விசாரிக்கப்பட்டும் வருகின்றனர்.

தனிமையில் தவிக்கும் மகிந்த

இவ்வாறான நிலையில் நீதிமன்றத் தீர்ப்புகள் வருவதற்கு முன்பே அவர்கள் தண்டனை அனுபவிக்கும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்,  முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவும் தற்போது இலங்கை, சிங்கப்பூர் என தனித்தனியான நாடுகளில் வாழ்கின்றனர். பயணவழிகாட்டிகளைப் படி

அவர்களின் பிள்ளைகளான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கண்டுகொள்ளாத வகையில் ரோகித மற்றும் யோசித ராஜபக்ச செயற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நாமல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முன்னரைப் போன்று பாசமாக அங்கு சென்று மூத்த சகோதரரை அவர்கள் பார்வையிடவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில் பசில் ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவை முழுமையாக விலகி தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவின் புதல்வரான ஷமிந்திர ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

இலங்கையை வங்குரோத்து அடையச் செய்தமைக்கு ராஜபக்ச குடும்பத்தினரே பொறுப்பு என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் நிதி மற்றும் ஏனைய குற்றங்களை இழைத்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் செய்த பாவங்களுக்கு கர்மவினையை தற்போது அனுபவித்து வருவதாக பலரும் தமது ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தகுதியற்ற மாணவி ஒருவரை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்காக அரசியல் குடும்ப பலத்தைப் பிரயோகிக்க முயற்சித்து நாமல் ராஜபக்ச வெளியிட்ட கடிதம் ஒன்றும் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசியல்செய்திகளை வாசி
 

Leave a comment

Comment