Andy Burnham's wife quits her job: பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாமின் மனைவி, தான் முன்னர் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
மின்சார வாகனங்கள் சார்ஜிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாமின் மனைவி, தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாமின் மனைவியான மேரி ஃப்ரான்ஸ் வான் ஹீல் (56) என்னும் ஃப்ராங்கி, Be.EV என்னும் மின்சார வாகனங்கள் சார்ஜிங் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார்.
அந்த நிறுவனத்தில், Chief customer officer என்னும் பொறுப்பிலிருந்தார் ஃப்ராங்கி. இந்நிலையில், அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார் அவர்.
அமெரிக்காவில், ஜனாதிபதியின் மனைவிக்கு, முதல் பெண்மணி என்ற கௌரவம் உண்டு. பிரித்தானியாவைப் பொருத்தவரை, அதிகாரப்பூர்வமாக அப்படி ஒரு விடயம் இல்லையென்றாலும், அந்த கௌரவம், பிரதமர் மனைவிக்குத்தான்.
ஆக, பிரதமர் எங்கு அரசு முறைப்பயணமாக சென்றாலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், அவருடன் அவரது மனைவியும் செல்லவேண்டியதாகிறது.
எனவே, ஒரு பிரதமரின் மனைவியாக ஆன்டி பர்னாமுடன் பயணித்து, பிற நாடுகளின் தலைவர்களின் மனைவிகளுடன் அளவளாவும் பொறுப்பு உள்ளதால், அதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள ஃப்ராங்கி, அதற்காகவே தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டதாக பிரதமர் இல்ல செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


