TamilsGuide

மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்கு பேரழிவு -  ஈரான் கடும் எச்சரிக்கை

 ஈரான் மீது மீண்​டும் தாக்​குதல் நடத்தி​னால் அமெரிக்கா​வுக்கு பேரழிவு ஏற்​படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்​துள்​ளது. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நீடித்து வரு​கிறது.

இந்த சூழலில் 7 நாட்​கள் போர் நிறுத்த திட்​டத்தை ஈரான் நேற்று முன்​தினம் முன்​மொழிந்​ததை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிராகரித்து விட்​டார்.

வரும் நவம்​பரில் ஈரான் மீது மீண்​டும் மிகப்​பெரிய தாக்​குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இந்த சூழலில் ஈரான் ராணுவ செய்​தித் தொடர்​பாளர் முகமது அக்ரமினியா மேபடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேற்​காசிய பிராந்​தி​யத்​தில் இக்கட்​டான சூழல் நில​வு​கிறது. இந்த பிராந்​தி​யத்​தில் மீண்​டும் மிகப்​பெரிய போர் மூளும் அபா​யம் எழுந்​திருக்​கிறது. எதிரி​யின் (அமெரிக்​கா) தாக்​குதல்​களை எதிர்​கொள்ள ஈரான் ராணுவம் முழு அள​வில் தயா​ராக உள்​ளது.

ஈரான் மீது மீண்​டும் தாக்​குதல் நடத்​தி​னால் எதிரிக்கு (அமெரிக்கா) பேரழிவு ஏற்​படும். இஸ்​ரேலை பாது​காக்க வேண்​டும் என்​பதே அமெரிக்​கா​வின் பிர​தான குறிக்​கோள். இதற்​காகவே வளை​குடா நாடு​களில் அமெரிக்க ராணுவ தளங்​கள் அமைக்கப்பட்டு உள்​ளன. இந்த தளங்​கள் முஸ்​லிம் நாடு​களின் பாது​காப்​புக்கு ஒரு​போதும் உத்​தர​வாதம் அளிக்​காது.

வளை​குடா பகு​தி​யில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்​களை​யும் மூட வேண்​டும். அப்​போது​தான் இந்த பிராந்​தி​யத்​தில் நிரந்தர அமைதி திரும்​பும். ஈரான் மீது இது​வரை 25,000-க்​கும் மேற்​பட்ட வான்​வழித் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு உள்​ளன.

இந்த தாக்​குதல்​களை வெற்​றிகர​மாக முறியடித்து உள்​ளோம் என முகமது அக்ரமினியா தெரி​வித்​தார்.  
 

Leave a comment

Comment