TamilsGuide

ஷிராந்தியை பழிவாங்கவில்லை – அரசாங்கம் 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை பழிவாங்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு சென்றமை தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கப்படாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் அவரை விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கவோ அல்லது மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவோ முடிந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல்செய்திகளை வாசி

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில், அவர் நாட்டிலிருந்து வெளியேறும்போது கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவரைத் தடுப்பதற்குப் போதிய வாய்ப்புகள் இருந்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், தற்போதும் அவர் தங்கியிருக்கும் நாட்டிலிருந்து அவரை மீண்டும் வரவழைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அவர் சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட பெண் அல்ல என்பதால் அந்நாட்டிலிருந்து அனுமதி பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இவ்வாறான குரோதமான அல்லது பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது எனவும், அனைத்து நடவடிக்கைகளையும் உரிய சட்டக் கட்டமைப்பு மற்றும் வழக்கமான நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் வலியுறுத்தியுள்ளார். 
 

Leave a comment

Comment