TamilsGuide

தனுஷுடன் இதுவரை இணைந்து நடிக்காதது ஏன்?- விளக்கம் கொடுத்த வடிவேலு..

நடிகர் தனுஷ் கடந்த சில நாட்களாக செய்திகளில் அதிகம் வந்த வண்ணம் உள்ளார்.

டெல்லி சென்று ஜனாதிபதி திரௌபதி மர்முவிடமிருந்து கேப்டன் மில்லர், ராயன் படத்திற்காக  2 தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார். தேசிய விருதை தனது அம்மாவிற்கு சமர்ப்பித்து அவர் வெளியிட்ட போட்டோ வைரலானது.

அதன்பின் தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார்.

தற்போது தனது புதிய படத்திற்கான பூஜையில் கலந்து கொண்டிருக்கிறார்.

லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பத்தமுத்து இயக்கத்தில் தனுஷ், ப்ரீத்தி முகுந்தன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா சிவகங்கையில் நடைபெற்றது.

இதில் பேசிய வடிவேலு, பெரிய கூட்டத்தையும், மக்களின் அன்பையும் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனுஷ் சாரின் படத்துக்கான பூஜை இவ்வளவு பெரிய விழாவாக நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதுவே மாநாடு போல இருக்கிறது. ஏன் அவருடன் இணைந்த நடிக்கவில்லை என்று கேட்கலாம், சினிமாவில் சில விஷயங்கள் சரியான நேரத்தில் அமைய வேண்டும், இப்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment