TamilsGuide

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்

பத்தேகமவின் ஹல்பத்தோட்டப் பகுதியில் இன்று (27) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த இரு பெண்கள் உட்பட மூவரை காரில் வந்த கும்பல் ஒன்று குறிவைத்தது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலேயே முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்தார்.

அதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த இரு பெண்களில் ஒருவர் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

அந்தப் பெண் அம்பலங்கொடப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு பெண் மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பத்தேகமவில் உள்ள காலி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கையொப்பமிட்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தப் பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை வழிமறித்து, T-56 ரகத் தாக்குதல் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தச் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment

Comment