TamilsGuide

நுகர்வோருக்கு மகிழ்ச்சி - லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனத்தினால் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலை குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 319 ரூபாயிலிருந்து 309 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 249 ரூபாயிலிருந்து 245 ரூபாயாகவும், ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 244 ரூபாயிலிருந்து 242 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 179 ரூபாயிலிருந்து 174 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனுடன், ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 174 ரூபாயிலிருந்து 173 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 179 ரூபாயிலிருந்து 174 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பின் மூலம் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment