TamilsGuide

கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம் - சமீபத்திய ஆய்வு முடிவுகள்

As Alberta referendum nearing, 70% of Albertans want province to remain in Canada: கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பிலான வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில், 70 சதவிகித மக்கள், கனடாவிலேயே நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பிலான வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில், மக்கள் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது. 

அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.

ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.

ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா, கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்கள் கருதுகிறார்கள்.

கடந்த ஆண்டு, சுமார் 30 முதல் 40 சதவிகித ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடா அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித் தெரிவித்திருந்தார்.

Stay Free Alberta என்னும் அமைப்பின் தலைவரான மிச் சில்வெஸ்டர் என்பவர், ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பில் புகார் மனு ஒன்றை உருவாக்கினார். 

அந்த மனு வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமானால், அது சுமார் 178,000 கையெழுத்துக்களைப் பெறவேண்டும். ஆனால், அந்த மனுவில் கையெழுத்திட்டவர்கள் எண்ணிக்கை, 300,000 கையெழுத்துக்களை தாண்டிவிட்டது.

ஆனால், சமீபத்தில், ஆய்வமைப்பான Ipsos நிறுவனம், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் மக்கள் மன நிலையை அறிய ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வில், மக்கள் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஆம், ஆய்வில் பங்கேற்றவர்களில் பத்தில் ஏழு பேர், அதாவது, 70 சதவிகிதம் பேர், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் இணைந்திருக்கவேண்டும் என்றே தாங்கள் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா, அல்லது, கனடாவிலிருந்து பிரிவதா, என்னும் கேள்விகள் நேரடியாக கேட்கப்படப்போவது இல்லை.

மாறாக, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா, அல்லது, பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள்தான் கேட்கப்பட உள்ளன.

ஆக, வாக்கெடுப்பில் ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவதற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளவர்களும், வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றுதான் வாக்களிக்க இருக்கிறார்களேயொழிய, ஆல்பர்ட்டா மாகாணம் பிரியவேண்டும் என அவர்கள் கூறப்போவது இல்லை.

உண்மையில், அவர்களும், ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வாக்களிப்பதன் மூலம், தங்களுக்கு ஃபெடரல் அரசு மீது உள்ள அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றே கருதுவதாக ஆய்வமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment