TamilsGuide

ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்

லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது உள்ளிட்ட தமது கோரிக்கைகள் 7 நாட்களுக்குள் நிறைவேற்றப்படுமானால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவொன்றை ஈரான் முன்வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரான் இந்த இராஜதந்திர முயற்சியை முன்வைத்ததுடன், கட்டார் மத்தியஸ்தர்கள் ஊடாக இது அமெரிக்கர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் அமெரிக்க தரப்பில் தீவிரத்தன்மை இருந்தால், இப்போது அனைத்தும் தயாராக உள்ளதாக அராச்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஒப்புக்கொண்டால், இருதரப்பும் ஒப்புக்கொண்ட விடயங்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம் என்றும் அராச்சி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
 

Leave a comment

Comment