TamilsGuide

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
 

Leave a comment

Comment