TamilsGuide

இன்னைக்கு என்னைக்கு ஒரு தலைவன்தான் - ஜெயிலர் 2 இரண்டாவது பாடல் வெளியானது!

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒன் சன் ஒன் மூன்’ வெளியாகி உள்ளது.

படத்தின் முதல் பாடலான அலே போலேலோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது பாடலும் வெளியாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

பாடலுக்கான அறிவிப்பு ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன் கேட்டது போலவே ஆங்கிலம், தமிழ் என அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் பாடல் அமைந்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் சிவராஜ்குமார், வித்யா பாலன், சூரஜ் வெஞ்சரமுடு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 

Leave a comment

Comment