TamilsGuide

லவ் வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது

பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள தமிழ் வெப் சீரிஸ் ‘லவ்’.

'காதலில் சொதப்புவது எப்படி', 'மாரி' போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.

ஒரு டேட்டிங் ஆப் நிறுவனத்தின் நிறுவனருக்கும், அவருக்குப் போட்டியாக இருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் இடையே நடக்கும் 60 நாள் சவால், அதன்மூலம் அவர்களுக்கு இடையே உருவாகும் காதலை அடிப்படையாக கொண்டு வெப் சீரிஸ் உருவாகி உள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள இந்த சீரிஸ் அக்டோபர் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இதன் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. 
 

Leave a comment

Comment