TamilsGuide

ஐந்து ஆண்டுகளில் சுவிஸ் குடியுரிமை - எதிராக வாக்களித்த சுவிஸ் நாடாளுமன்றம்

The Council of States has rejected a popular initiative that would have let foreigners apply for citizenship after just five years: வெளிநாட்டவர்கள் ஐந்து ஆண்டுகளில் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வகை செய்யும் பிரேரணைக்கு எதிராக சுவிஸ் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

சுவிஸ் குடியுரிமை பெறுவது எவ்வளவு கடினமான விடயம் என்பது பலரும் அறிந்ததே.

வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவேண்டுமானால், அவர் பத்து ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும், விதிகளுக்கு உட்பட்டு நடந்திருக்கவேண்டும்!

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் ஐந்து ஆண்டுகள் சட்டப்படி வாழ்ந்த, தகுதியான வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வகை செய்யும் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.

ஆனால், அதை சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவை நிராகரித்துவிட்டது. 

அதைத் தொடர்ந்து, சுவிஸ் நாடாளுமன்றத்தின் மேலவையில் அந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 

பிரேரணைக்கு எதிராக 34 பேரும் ஆதரவாக 9 பேரும் வாக்களிக்க, மேலவையிலும் அந்த பிரேரணை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

விடயம் என்னவென்றால், பிரேரணைக்கு ஆதரவாக 100,000 பேர் கையெழுத்திட்டுள்ளதால், அது இனி மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும்.

மக்கள் என்ன முடிவு செய்யப்போகிறார்கள் என்பது தெரியாது. ஆனாலும், மக்கள் அந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என சுவிஸ் நாடாளுமன்றம் பரிந்துரைக்க உள்ளது.
 

Leave a comment

Comment