TamilsGuide

காபி குடிப்பதற்காக 74 நாடுகளுக்கு பயணம் செய்துள்ள நபர்

man plans to visit every starbucks branch in world:அமெரிக்காவை நபர், உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஸ்டார்பக்ஸ் கிளைகளுக்கு சென்றும் காபி அருந்துவதை இலக்காக கொண்டு, இதுவரை 74 நாடுகளில் 20,563 கடைகளுக்கு சென்று வந்துள்ளார். 

1971 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம், உலகம் முழுவதும் 87 நாடுகளில், 40,990 கடைகளை திறந்துள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த வின்டர் என்ற நபர், உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஸ்டார்பக்ஸ் கிளைகளுக்கு சென்றும் காபி அருந்துவதை இலக்காக கொண்டுள்ளார்.

கல்லூரி படிப்பை முடித்த பின்னர், 90களின் நடுப்பகுதியில் டல்லாஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்த போது ஸ்டார்பக்ஸ் விரிவடைய தொடங்கியது.

ஒவ்வொரு சில மாதங்களுக்கும் ஒரு புதிய ஸ்டார்பக்ஸைக் கடந்து சென்ற அவருக்கு, ஸ்டார்பக்ஸ் எப்படி இருக்கிறது என்று சென்று பார்க்க வேண்டும் என தோன்றியுள்ளது. 

சுயாதீன கணினி நிரலாளரான இவர், 1997 ஆம் ஆண்டில் உலகில் உள்ள அனைத்து ஸ்டார்பக்ஸ் கிளைகளுக்கு சென்றும் காபி அருந்துவதை இலக்காக நிர்ணயித்துள்ளார்.

அப்போது சுமார் 1,500 கடைகள்மட்டுமே இருந்தது. தற்போது ஸ்டார்பக்சின் மொத்த எண்ணிக்கை 40,990 கடைகளாக உயர்ந்துள்ளது.

ஆனால், வின்டர் தனது இலக்கிலிருந்து பின்வாங்காமல் தற்போது வரை 74 நாடுகளில் உள்ள 20,563 கடைகளுக்கு சென்று வந்துள்ளார். ஸ்டார்பக்ஸில் பணியாற்றும் எந்த ஒரு ஊழியரும் கூட இத்தனை கடைகளுக்கு சென்று வந்திருக்க மாட்டார்கள்.

அவரின் 74வது நாடாக ஹோண்டுராஸ் இருந்துள்ளது. கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு, ஹூஸ்டன் பகுதியில் டெக்சாஸின் நியூ கேனியில் திறக்கப்பட்ட ஸ்டார்பக்ஸ் கடைக்கு சென்று வந்துள்ளார். 

விண்டர் இதற்காக 1,80,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.72 கோடி) செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வேலைக்கு விடுப்பு எடுத்த நாட்களையோ, வேலையை முடித்தவுடனேயே உடனடியாக வேலை தேடாமல், ஸ்டார்பக்ஸுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ததையோ இதில் கணக்கில் கொள்ளவில்லை.

நாள்பட்ட கை வலி மற்றும் கார்பல் டன்னல் சிண்ட்ரோம் காரணமாக தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ சிகிச்சைக்காக இங்கே ஹூஸ்டனில் முடங்கிக் கிடந்தாலும், இந்தத் தெருவில் ஒரு புதிய ஸ்டார்பக்ஸ் திறக்கப்பட்டால், நான் கண்டிப்பாகச் சென்று பார்ப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், எனது 100வது பிறந்தநாளில் ஒரு ஸ்டார்பக்ஸிற்குச் செல்ல வேண்டும் என்பது என் கனவு என தெரிவித்துள்ளார்.

இவரின் முயற்சிக்கு ஊடகங்களின் கவனம் கிடைத்தபோது, அப்போதைய CEO ஹோவர்ட் ஷுல்ட்ஸின், இவரின் ஆர்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் குறிப்பு,  கையொப்பமிடப்பட்ட புத்தக பிரதி, 2 காபி பைகள், 2 குவளைகள் மற்றும் சில சாக்லேட் இனிப்புகள் அடங்கிய ஒரு அன்பளிப்புப் பெட்டியை அனுப்பியுள்ளனர். பிரித்தானியாவிற்கு சென்ற போது, ஸ்டார்பக்ஸ் பிரித்தானியாவின் நிர்வாக இயக்குநர் கிளிஃப் பர்ரோஸ் இவரை நேரில் வந்து சந்தித்துள்ளார். 

இதுவரை அவர் சென்றதிலே, எல் சால்வடாரில் உள்ள ஸ்டார்பக்ஸ் காசா பூ தான் மிகவும் பிடித்தமானது என தெரிவித்துள்ளார். 3 மாடிகளைக் கொண்ட அந்த கிளையில், இரண்டாம் மாடியில் ஒரு நூலகமும், மூன்றாம் மாடியில் ஒரு கலைக்கூடமும் உள்ளது.

ஸ்டார்பக்ஸ் எல்லா இடங்களிலும் ஒரே சுவையுடன் இருக்கிறதா என்று கேட்டதற்கு, குறிப்பிடத்தக்க வகையில் சீராக இருந்து வருவதாகவும், ஆனால் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒப்புக்கொள்தாகவும் கூறியுள்ளார்.

மேலும், “ஸ்டார்பக்கிங்: உலகில் உள்ள ஒவ்வொரு ஸ்டார்பக்ஸையும் சென்று பார்ப்பதற்கான ஒருவரின் தேடல்” என்ற தலைப்பில் அந்தப் பயணம் குறித்த ஒரு புத்தகத்தை எழுதி வருகிறார்.
 

Leave a comment

Comment