TamilsGuide

இரண்டு புதிய தூதுவர்கள் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல்

பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவுக்கான புதிய தூதுவர் நியமனங்களுக்கு அரசியலமைப்புப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் பிரகாரம் பிலிப்பைன்ஸிற்கான இலங்கையின் தூதராக செல்வி அன்சுல் பானு ஜான் மற்றும் கனடாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக சந்தன ரோஹன குமார அம்பகொல்லவையும் நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நுசித் குமாரதுங்கவை நியமிப்பதற்கும் அதே குழு ஒப்புதல் அளித்துள்ளது.

குறித்த நியமனங்களுக்கான பரிந்துரைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment