TamilsGuide

புத்தகங்களுக்கான வற் வரியை நீக்குதல் - பிரதமர் வெளியிட்ட தகவல்

நாட்டில் புத்தகங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றுவதற்கு அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது குறித்து சாதகமான நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும் என்றும் ஜனாதிபதி கூறியதாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை இன்று (25) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவுசெலவுத் திட்டம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், "எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் புத்தகங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை மாற்றுவதற்கு அதிகபட்ச முயற்சி எடுப்பதாகவும், அது சாத்தியமாகும் என்றும் ஜனாதிபதி பேசும்போது கூறினார்.

அந்த நம்பிக்கையைக் கொடுக்குமாறு அவர் தம்மை வலியுறுத்தியுள்ளார்” என பிரதமர் மேலும் குறிப்பிட்டார். 
 

Leave a comment

Comment