TamilsGuide

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் வான்வழித்தாக்குதல்

இந்த நிலையில் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் உள்ள 10 இடங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது.

பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றதை பாகிஸ்தான் ராணுவம் முறியடித்த பின்னர் ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் 8 டிரோன்களை ஏவி, பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயன்றனர் என்றும் இதையடுத்து ஆப்கானிஸ்தான் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தான் ஏவிய 8 டிரோன்களும் வடமேற்கு நகரமான கோஹாட் மற்றும் எல்லை நகரமான தோர்கா மிற்குள் நுழைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தி அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் இந்த தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பித்தக்கது.
 

Leave a comment

Comment