TamilsGuide

ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்க வெட்கமாக இல்லையா? - நியூயார்க் மேயரை விமர்சனம் செய்த இஸ்ரேல் பிரதமர்

நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் மாகாணத்திற்குள் நுழைந்தால் கைது செய்வோம் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள சில குடியரசு கட்சி எதிர்ப்பாளர்கள், மம்தானியின் பாலஸ்தீன ஆதரவு பிரசாரத்தையும், காசாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மீதான அவரது விமர்சனத்தையும் சுட்டிக்காட்டி, அவரை யூத விரோதி என விமர்சனம் செய்தனர்.

இந்த குற்றச்சாட்டை மம்தானி நிராகரித்ததோடு, இஸ்ரேல் அரசாங்கத்திடம் கொள்கை மீதான தனது விமர்சனம், யூத மக்களின் மீதான வெறுப்புடன் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், மம்தானி வெறுப்பை தூண்டுவதாக கூறினார். மேலும், அவர் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மக்களுக்கும் மேயராக இருக்க வேண்டும்;

ஆனால் அவரோ ஒரு குழுவை மற்றொரு குழுவினருக்கு எதிராக திருப்ப முயற்சிப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சிக்கு மம்தானி அளித்த பேட்டியில், நெதன்யாகுவை ஒரு போர் குற்றவாளி எனவும், பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலையின் சூத்திரதாரி என மீண்டும் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் மம்தானியின் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட காணொளி காட்சியில், "நான் ஐ.நா மாநாட்டிற்கு வருகிறேன்.

நமது படை வீரர்களை பற்றிய உண்மையையும், உங்களை பற்றிய உண்மையையும் நான் கூற போகிறேன்

மம்தானி அவர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? யூத மக்களை படுகொலை செய்த ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்காக உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

நியூயார்க் நகரில் வசித்து வரும் யூதர்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டியதற்காக உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Leave a comment

Comment