Canada, France agree to closer ties in defense, economy: பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் நெருக்கமான உறவுகள் வைத்துக்கொள்ள கனடாவும் பிரான்சும் முடிவு செய்துள்ளன.
ட்ரம்ப் தொடர்ந்து கனடா முதலான பல நாடுகளுக்கு தொல்லை கொடுத்துவரும் நிலையில், கனடா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் தனது சமூக ஊடகப்பக்கத்தில் உலக வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார் ட்ரம்ப்.
கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியிலுள்ள பிரான்சுக்கு சொந்தமான Saint-Pierre மற்றும் Miquelon, மற்றும் சில கடல் கடந்த பிரதேசங்களும் அமெரிக்காவின் பகுதிகளே என காட்டும் வகையில் அந்த வரைபடம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ட்ரம்பின் தொல்லைக்கு ஆளாகிவரும் கனடாவும் பிரான்சும், பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் நெருக்கமான உறவுகள் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.
விடயம் என்னவென்றால், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து கனடா பிரதமரான மார்க் கார்னியும், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும் ஞாயிற்றுக்கிழமையன்று சந்தித்துப் பேசினார்கள்.
அதுவும், பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களான Saint-Pierre மற்றும் Miquelon தீவுகளில், மேக்ரானும் கனடா பிரதமரான மார்க் கார்னியும் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
அதாவது, எந்த கனடாவும் Saint-Pierre மற்றும் Miquelon தீவுகளும் அமெரிக்காவுக்கு சொந்தம் என்பதுபோல் காட்ட ட்ரம்ப் வரைபடம் வெளியிட்டாரோ, அதே Saint-Pierre மற்றும் Miquelon தீவுகளில், மேக்ரானும் கனடா பிரதமரான மார்க் கார்னியும் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இந்த Saint-Pierre மற்றும் Miquelon தீவுகள், கனடாவின் Newfoundlandஇலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளன.
ஆக, இது எங்கள் ஏரியா, இதில் தலையிடவேண்டாம் என ட்ரம்புக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் மேக்ரானும் மார்க் கார்னியும்!


