TamilsGuide

இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்

அமெரிக்காவின் கேப் கோட் பகுதியில் அமைந்துள்ள சரணாலயத்தில் இரட்டைத் தலைகளுடன் கூடிய ஆமைக்குஞ்சு ஒன்று பொறித்துள்ளது.

இரட்டையர்களாக உருவாக வேண்டிய கரு முழுமையாகப் பிரியாமல், ஒரே உடலில் இரண்டு தலைகளுடன் உருவாகும் அரிய நிலை 'Bicephaly' என அழைக்கப்படுகிறது.

இத்தகைய உடலமைப்பு மிகவும் அரிதாகவே காணப்படும் நிலையில், கேப் கோட் சரணாலயத்தில் பொறித்துள்ள இந்த ஆமைக்குஞ்சு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வழக்கத்திற்கு மாறான உடலமைப்புடன் காணப்படும் இந்த ஆமைக்குஞ்சை சரணாலயப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment