TamilsGuide

சிங்கப்பூர் நீரிணையில் சரக்குக் கப்பல் - மீன்பிடிப் படகு மோதி விபத்து

சிங்கப்பூர் நீரிணையில் பனாமா கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலொன்று மீன்பிடிப் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த மோதல் காரணமாக மீன்பிடிப் படகில் சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் மோதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment