TamilsGuide

ஜேர்மனி- இரண்டு மாகாணத் தேர்தல்களிலும் மண்ணைக் கவ்விய ஆளுங்கட்சி

In German state electionas, AfD wins in northeastern state, Left in Berlin: ஜேர்மன் மாகாண தேர்தல்களில் ஒன்றில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியும் மற்றொன்றில் இடதுசாரிக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

ஜேர்மன் மாகாணங்கள் இரண்டில் நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில், இரண்டு மாகாணங்களிலுமே ஆளுங்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

ஜேர்மனியின் Mecklenburg-Western Pomerania மாகாணத்திலும், பெர்லின் மாகாணத்திலும் நேற்று தேர்தல் நடைபெற்றது. 

முதல் சுற்று வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், Mecklenburg-Western Pomerania மாகாணத்தில், தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பெர்லினைப் பொருத்தவரை, இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலாக அமைந்துள்ளது. காரணம், இடதுசாரிக் கட்சியான Left Party அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 

பெர்லினில் வெற்றி பெற்றுள்ள Left Party கட்சியின் வேட்பாளரான Elif Eralp, துருக்கி நாட்டிலிருந்து அகதிகளாக வந்த ஒரு தம்பதியரின் மகள் ஆவார்.

ஆக, இரண்டு மாகாணங்களிலுமே, ஆளும் Christian Democratic Union (CDU) கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

AfD கட்சியைப் பொருத்தவரை, ஏற்கனவே Saxony-Anhalt மாகாணத்தில் AfD கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், Mecklenburg-Western Pomerania மாகாணத் தேர்தலில் கிடைத்த வெற்றி, அக்கட்சிக்கு கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment