பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை மீண்டும் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் புகழ்பெற்ற “பழிவாங்கும் ஆடை”(Revence Dress) சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள சோதேபிஸ்(Sotheby’s) என்ற ஏல நிறுவனத்தினால் நடத்தப்படும் கண்காட்சியில் இந்த பழிவாங்கும் ஆடை வைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நேற்று தொடங்கப்பட்ட இந்த கண்காட்சி செப்டம்பர் 24ம் திகதி வரை நடைபெற உள்ளது.
லண்டனை தொடர்ந்து ஹாங்காங், ஜெனிவா போன்ற நகரங்களின் கண்காட்சிகளில் வைக்கப்பட்டு இறுதியாக 2026ம் டிசம்பர் 9ம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை ஏலம் விடப்படவுள்ளது.
இப்போதைய பிரித்தானிய மன்னர் மற்றும் அப்போதைய இளவரசரான சார்லஸ் உடனான திருமணம் முறிவை சந்தித்த போது, இளவரசி டயானா சோகத்தில் மூழ்கி விடாமல், இந்த உலகத்திற்கு தன்னுடைய அழகையும், தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அணிந்த ஆடைகளை ஊடகங்கள் பழிவாங்கும் ஆடை என வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.


